பெட்றோல் நெருக்கடி : 8ஆம் திகதியளவில் வழமைக்கு திரும்பும் – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

0
37

பெட்றோல் நெருக்கடி : 8ஆம் திகதியளவில் வழமைக்கு திரும்பும் – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

பாவனையாளர்களின் நாளாந்த தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று பெற்றோலியவளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் எரிபொருள் தொடர்பான குழப்பநிலையை சிலர் தோற்றுவித்ததினாலேயே பெற்றோல் போன்ற எரிபொருளுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருளுக்கான போலியான நெருக்கடி நிலையை ஏற்படுத்தி சிலர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டமையினால் கலன்களுக்கும் போத்தல்களுக்கும் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்கக்ககூடாது என்று தடைவிதிக்கப்பட்டதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.

அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில் எரிபொருளுடனான கப்பல் 8ஆம் திகதியளவில் இலங்கையை வந்தடையும் என்றும் அதன்பின்னர் விநியோக நடவடிக்கைகள் வழமைபோல் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com