தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால்

0
27

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால்

பூரண ஹர்த்தால்

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று (13) வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பூரண ஹர்த்தால்

வுவுனியா நீதிமன்றில் தமது வழக்குகளை நடாத்துமாறு அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 18 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்த வருகின்றார்கள். மூன்று அரசியல் கைதிகளினதும் கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானமெடுத்து உடனடியாக விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

பூரண ஹர்த்தால்

அரசியல் கைதிகளின் வழக்கு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் 16 ற்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்னர்.

பூரண ஹர்த்தால்

கலந்துரையாடலின் நிறைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கான அவசர கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.
அனைத்து அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அரசு அரசியல் தீர்மானமெடுத்து நிபந்தனையின்றி அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கோரிக்கைக் கடிதத்திற்கு இதுவரை ஜனாதிபதியிடமிருந்து உரிய பதிலெதுவும் வழங்கப்படாத நிலையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பூரண ஹர்த்தால்பூரண ஹர்த்தால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments