புலிகளின் தங்கத்தை தேடிய மூவர் கைது

0
615

புலிகளின் தங்கத்தை தேடிய மூவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் புதுக்குடியிருப்பு – விஸ்வமடு பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, இவர்களிடம் இருந்து பெக்கோ இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர்கள் பயன்படுத்திய பெக்கோ இயந்திரம் கொள்ளையிடப்பட்ட ஒன்று என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 33, 23 மற்றும் 21 வயதான நபர்களே கைதுசெய்ப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 33 வயதான நபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com