புற்றுநோயை குணப்படுத்தும் புதிய முறை கண்டுபிடிப்பு

0
47

அமெரிக்கா (நியூயார்க்):

அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர். அதனை எலியின் உடலில் பரிசோதித்து வெற்றி பெற்றதாக கூறியுள்ளனர்.

இந்த புதிய சிகிச்சையின் படி, முதலில் புற்று நோய் கட்டிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்க வேண்டும். உடலில் அடிப்பட்ட போது ரத்தம் வெளியேறுவதை தடுக்க கொடுக்கப்படும் மருந்துகளை இந்த சிகிச்சை முறைக்கு பயன்படுத்துகின்றனர். அவை டி.என்.ஏ. நிறைந்த நானோ ரோபோட்டுகள் மூலம் செலுத்தப்பட்ட உடன் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும். இதனால் கேன்சர் செல்கள் செயலிழக்கின்றன. அதன் பின் கட்டிகள் சுருங்கிக் கொண்டே இருக்கும். கேன்சர் செல்கள் பரவுவதும் குறையும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளிடம் செய்த சோதனையில், சிகிச்சைக்கு பிறகு எலிகளின் வாழ்நாள் மற்ற எலிகளை விட இரண்டு மடங்காக அதிகரித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இதனை மனிதர்களை போன்ற உடல் உறுப்புகளை கொண்ட பாமா மினியேச்சர் பன்றியின் உடலிலும் சோதனை செய்தனர். விரைவில் மனிதர்களுக்கு இச்சோதனை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.