Want create site? Find Free WordPress Themes and plugins.

 ”நான் சாக­டிக்­கப்­ப­டலாம்; ஆனால் ஒரு­போதும் தோற்­க­டிக்­கப்­ப­ட­மாட்டேன்” 

உலகம் முழு­வதும் எத்­த­னையோ புரட்­சிகள் இடம்­பெற்று அவை வர­லாற்றில் தடம்­ப­தித்­தாலும் புரட்­சி­யாளன் என்­ற­வுடன் வர­லாற்றில் நீங்­காது ஒலிக்கும் உன்­ன­த­மான ஒற்றை நாமத்­திற்கு சொந்­தக்­காரர் எர்­னெஸ்ற்றோ சேகு­வேரா எனப்­படும் சே என்ற மாபெரும் புரட்­சி­யா­ளனே.

ஓட்­டு­மொத்த உலகில் கண்­டத்­துக்கு கண்டம், நாட்­டுக்கு நாடு புரட்­சிகள் வேறு­பட்­டாலும் புரட்­சி­யா­ளர்கள் என்று தம்மை அடை­யா­ளப்­ப­டுத்தும் அனை­வ­ருக்கும் முக­வரி சே என்­பதே வர­லாறு எமக்கு கற்­றுத்­தந்த பாடம்.

புரட்­சிகள் வெற்­றி­ய­டைந்த வர­லாறு உண்டு மறு­மு­னையில் தோல்­வி­ய­டைந்த வர­லாறும் உண்டு. ஆனால் புரட்­சி­யாளன் ஒருவன் வீர­ம­ர­ணத்­தி­லேயே வெற்­றி­ய­டை­கின்றான் என்­ப­தற்கு வீர­கா­வி­ய­மாக இருப்­பவன் சே என்­பதை அண்­ட­ச­ரா­ச­ரமும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.che guevara

சேகு­வேரா போன்ற தன்­னி­க­ரற்ற ஒரு தலை­வனின் வாழ்க்கை சம்­ப­வங்கள் ஒரு வர­லா­றாக இன்றும் பதி­யப்­பட்­டுள்­ளது என்றால் அதற்கு காரணம் புரட்­சிக்­காக தனது உயிரை மாய்த்­துக்­கொள்­வ­தைக்­கூட துச்­ச­மாக எண்ணி நண்­பனை அர­வ­ணைப்­பது போன்று வீர­ம­ர­ணத்தை தழு­வு­வ­தற்கு எதிர்­பார்த்­தி­ருந்­த­தே­யாகும்.

எர்­னெஸ்ற்றோ சேகு­வேரா என்ற இயற்­பெயர் ஒரு புரட்­சி­யா­ளனின் தனிப்­பட்ட வீரம் அல்ல அது ஏகா­தி­பத்­திய ஆட்­சி­யா­ளர்கள் அனை­வரும் கதி­க­லங்கி அஞ்சி நடுங்­கிய ஒரு புரட்சி அலைஇஎரி­ம­லையின் குமுறல், அணு ஆயுதம்.

 ஆர்­ஜென்­டீ­னாவில் 1928 ஜூன் மாதம் 14 ஆம் திகதி பிறந்த சேகு­வேரா மாக்­சி­ய­வாதி, மருத்­துவர்இ இலக்­கி­ய­வாதி, யுத்­த­வல்­லுனர், இரா­ஜ­தந்­திரி எனும் பல்­வேறு பரி­ணா­மங்­களைக் கொண்ட புரட்­சி­யாளன் மாத்­தி­ர­மல்ல அதற்கு அப்பால் நற்­பண்­புகள் மிக்க மனித நேயம் கொண்ட ஒரு தன்­னி­க­ரற்ற தலைவன்.

தனது இள­மைக்­கா­லத்தில் இலத்தின் அமெ­ரிக்க தேச­மெங்கும் பயணம் செய்த சே அங்கு ஏகா­தி­பத்­திய ஆட்­சி­யா­ளர்­களின் கொடுங்கோல் ஆட்­சியால் அவ­திப்­பட்ட மக்­களின் வாழ்வில் வசந்­தத்தை ஏற்­ப­டுத்தும் நோக்கில் தனது புரட்­சியை ஆரம்­பித்து மெக்­சி­க்கோவில் கியூபப் புரட்­சி­யாளர் பிடல் காஸ்ட்­ரோவை சந்­தித்தார்.che guevara

கியூபாவில் கொடுங்கோல் ஆட்­சி­பு­ரிந்த சர்­வ­தி­கா­ரி­யான படிஸ்­டாவின் ஆட்­சியை கவிழ்க்கும் பிடல் காஸ்ட்­ரோவின் எண்­ணத்தை அறிந்த சே ஜுலை 26 இயக்­கத்தில் தன்­னையும் இணைத்து கொண்டார்.che guevara

நாடு கடந்து தேசம் கடந்து மக்­களின் நல­னுக்­காக காஸ்ட்­ரோ­வுடன் இணைந்து கொண்ட சேகு­வே­ராவின் துணிச்சல் மிக்க உத­வி­யு­டனும் மக்கள் ஆத­ர­வு­டனும் படிஸ்­டாவின் படை­யினர் படிப்­ப­டி­யாக முறி­ய­டிக்­கப்­பட்­டனர்.கொடுங்கோல் ஆட்­சி­யா­ளர்கள் அனை­வரும் சே என்ற பெயரைக் கேட்­டாலே அஞ்சி நடுங்கும் அள­வுக்கு அவ­ரது நாமம் உல­கெங்கும் ஓங்கி ஒலிக்க ஆரம்­பித்­தது.

இட­து­சா­ரி­களின் சாம்­ராஜ்­ஜி­ய­மாக திகழ்ந்த சோவியத் ஒன்­றி­யத்தின் ஏவு­கணைப் பாது­காப்பு கட்­ட­மைப்­பை கியூபாவில் நிறுவும் பணி­களில் முன்­னின்று உழைத்த சே உழைப்­பா­ளி­களின் இரத்­தத்தை உறிஞ்சிக் குடித்த எகா­தி­பத்­திய கழு­கு­களின் கோரப்­பார்­வைக்கு இலக்­காகப் போவதை அறிந்­தி­ருந்தும் தனது போராட்ட குணத்­தையோ எண்­ணத்­தையோ கைவிட தயா­ராக இருக்­க­வில்லை.

che guevara
தனது நண்­பரும் கியூப அதி­ப­ரு­மான பிடல் காஸ்ட்­ரோ­வுடன்

கியூபாவின் புரட்­சியின் சின்­ன­மாக விளங்­கிய காஸ்ட்ரோ வழங்­கிய கியூப வங்­கித்­த­லைவர்இ நிதி அமைச்சர் என்ற கௌர­வங்­களை ஏற்­றுக்­கொள்­ளாது சேகு­வேரா காக்கி உடை­ய­ணிந்து அஞ்சா சிங்­க­மாக புரட்சி என்ற முட்­பா­தையில் தனது கால்­களை தடம்­ப­தித்தார்.

தனது நண்­பரும் கியூப அதி­ப­ரு­மான பிடல் காஸ்ட்­ரோ­வுக்கு சே எழு­திய வரிகள்: என்­னு­டைய எளி­மை­யான முயற்­சி­களும் உத­வி­களும் வேறு சில நாடு­க­ளுக்குத் தேவைப்­ப­டு­கி­றது. புதிய போராட்டக் களங்கள் காத்­தி­ருக்­கின்­றன.ஏகா­தி­பத்­தி­யத்தை எதிர்த்துப் போரா­டு­வதை புனித கட­மை­யாக மேற்­கொள்வேன். அதை நிறை­வேற்­றவும் செய்வேன். இதுதான் என்­னு­டைய பலத்­துக்கு ஆதா­ர­மாக இருக்­கி­றது. எனது மனைவிஇ மக்­க­ளுக்கு எந்தச் சொத்­தையும் நான் விட்டுச் செல்­ல­வில்லை. அதற்­காக வருத்­தப்­ப­டவும் இல்லை. இப்­படி இருப்­பதில் எனக்கு மகிழ்ச்­சிதான். நமது முன்­னேற்றம் எப்­போதும் வெற்­றியை நோக்­கியே. வெற்றி அல்­லது வீர­ம­ரணம் என்­பதே.che guevara

புரட்­சியை இலத்தின் அமெ­ரிக்க தேசம் எங்கும் பரப்பும் நோக்கில் மெக்­ஸிக்கோ, கொங்கோ, பொலி­வியா என பல நாடு­க­ளுக்கு பயணம் செய்த சேகு­வேரா அங்­குள்ள போரா­ளி­க­ளுக்கு பயிற்சி வழங்­கினார். சேயின் வீரமும் அவ­ரது ஆற்­றலும் வர­லாற்றில் அவர் செய்­யப்­போகும் எதிர்­கால புரட்­சி­களும் சி.ஐ.ஏ.யின் கழு­குக்­கண்­களில் சிக்­கி­யது.

யூதாஸ் எட்­டப்பன் வழித்­தோன்றல் ஒரு­வனால் காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்ட சேயின் உடலை 1967 ஆம் ஆண்டு இன்று போன்­றதோர் நாளில் சல்­ல­டை­யிட்­டன.

நான் சாக­டிக்­கப்­ப­டலாம்; ஆனால் ஒரு­போதும் தோற்­க­டிக்­கப்­ப­ட­மாட்டேன் என்ற சேயின் வார்த்­தையின் மதிப்பு யாருக்கு தெரி­கின்றதோ இல்­லையோ உண்­மை­யான புரட்­சி­யா­ளர்­க­ளுக்கு அது விளங்கும்.che guevara

எனக்கு வேர்கள் கிடை­யாது கால்கள் தான். அடி­மைத்­தனம் எங்­கெல்லாம் இருக்­கி­றதோ அங்­கெல்லாம் என் கால்கள் பய­ணிக்கும்.

என்ற சேயின் வரிகள் தீர்க்­க­த­ரி­சனம். இன்றும் எங்­கெல்லாம் போராட்­டங்கள்இ புரட்­சிகள் ஏற்­ப­டு­கின்­றதோ அனைத்து இடங்­க­ளிலும் சேயின் புகைப்­படம் உலா­வ­ரு­வது அவர் இன்றும் போராட்­டங்­களில் கலந்­து­கொள்­கின்றார் என்­ப­தற்கு சான்று.புரட்­சி­யா­ளன் சேகுவரா

உலகிற்கு இத்தகைய உண்மைகளை உணர்த்திய சே தனது பிள்ளைகளுக்கு ் வழங்கிய அறிவுரை என்ன தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமல்ல. புரட்சி ஒன்றே மிக முக்கியமானது. உலகத்தில் எங்கேனும் யாருக்காவது கொடுமைகள் நடந்தால் அவர்களுக்காக வருத்தப்படுங்கள். எவ்வளவு பொதுநலம் நிறைந்த ஒரு தந்தை.

ஆர்ஜன்டீனாவில் பிறந்து கீயூபா, மெக்ஸிக்கோ, கொங்கோ, பொலிவியா போன்ற நாடுகளின் புரட்சிக்காக பாடுபட்ட சே இன்றும் புரட்சியின் முகவரியாய் மக்கள் இதயங்களில் வாழ்ந்து வருகின்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments