புதிய வைத்திய சங்கமொன்றை உருவாக்க அரசு முயற்சி

0
26

தற்போதைய அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
த்தை செயலிழக்கச் செய்வதற்காக புதிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கமொன்றை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கின்றது என சுகாதார அமைச்சின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திலுள்ள ஏராளமான உறுப்பினர்கள் சங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்துள்ளனர் எனவும், எவ்வாறாயினும் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்ட அவர்கள் அஞ்சுகின்றனர் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்துத் தெரிவித்திருக்கின்றார் எனவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் உட்பட நாட்டின் பல மாகாணங்களில் பணிபுரியும் அரச வைத்தியர்கள் தற்போதைய சங்கத்தின் நடவடிக்கைகளில் பெரிதும் அதிருப்தியடைந்திருக்கின்றனர் எனவும், புதிய சங்கமொன்று உருவானால் ஏராளமானவர்கள் அதில் இணைந்துகொள்வார்கள் என்பது நிச்சயம் எனவும் சுகாதார அமைச்சர் எதிர்பார்ப்பதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments