புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தோற்கடிப்பதற்கு தயாராகும் கூட்டமைப்பு

0
15
Want create site? Find Free WordPress Themes and plugins.

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தோற்கடிப்பதற்கு சிறுபான்மைக் கட்சிகள் தயாராகி வருவதாக அறிய முடிகிறது.

இந்த நாட்டில் பயங்கவராத அச்சுறுத்தலோ அல்லது தீவிரவாதமே இல்லாத சூழலில் இதற்கு புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம். இருக்கும் சட்டத்தை அகற்றுமாறு கோரி பல சந்தர்ப்பங்களில் அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறியுள்ளது.

புதிய பயங்கரவாதத்

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளோட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் புதிய பயங்கரவாத் தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் இந்தச் சட்டமூலத்தை தோட்கடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது. அதன் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் ஏனைய உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் கூட்டமைப்பு பேச்சுகளை நடத்தவுள்ளது.

புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டிக்கு அவசியமற்றதொன்றாகும். இதனை தோற்கடித்து சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments