புதிய எதிர்பார்புடன் நாடு முன்னோக்கிச் செல்வதற்காகவே அமைச்சரவை மாற்றம் : ஜனாதிபதி

0
20

புதிய எதிர்பார்புடன் நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்ல அமைச்சரவை திருத்தத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுபீட்சத்திற்காக அர்ப்பணிப்புடன் செற்படுமாறு புதிதாக அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சரர்களை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

புதிய எதிர்பார்புடன்

புதிய அமைச்சர்கள், அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

நட்புறவோடும், அர்ப்பணிப்புடனும் நாட்டின் சுபீட்சத்திற்காக கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

சிறந்த மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமே சமூகத்தையும், நாட்டையும் மாற்றியமைக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபகோன் உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement