புதிய அரசாங்கமொன்றை உருவாக்கவேண்டிய தேவை எமக்கு இல்லை

0
43

“புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில், என்னுடன் எவரும் இதுவரை பேசவில்லை” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தற்போதை பரபரப்பான கொழும்பு அரசியல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“புதிய அரசாங்கமொன்றை உருவாக்கவேண்டிய தேவை, தமது கட்சிக்கு இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்கின்றோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்கள் பலமடைந்துள்ளன.

நாட்டு மக்கள், மீண்டும் அவரிடம் அதிகாரத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க, முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக, சர்வதேசத்தின் முன்னிலையில் மஹிந்த ஏற்கெனவே உறுதியளித்துள்ளார். அவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” இவ்வாறு சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரைமசிங்க ஆகியோரை இந்திய மற்றும் அமெரிக்க உயர்ஸ்தானிகர்கள் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com