புதிய அரசமைப்பொன்றை தயாரிப்பது தொடர்பில் ஆராய வழிநடத்தல் குழு 3ஆம் திகதி கூடுகிறது

0
21

புதிய அரசமைப்பொன்றை தயாரிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழு அடுத்த மாதம் 3ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

புதிய அரசமைப்பொன்றை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள 21 பேர் அடங்கிய குழுவொன்று நாடாளுமன்றில் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவராக உள்ளார்.

மேற்படி வழிநடத்தல் குழு பலமுறை கூடியுள்ளது. அதிகாரப் பகிர்வு, மாகாணங்களுக்கிடையிலான பொலிஸ், காணி அதிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், பெரும்பான்மை, சிறுபான்மைகங கட்சிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளை உள்ளடக்கி வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பது தொடர்பில் தீர்மானமெடுக்க எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வழிநடத்தல் குழு மீண்டும் கூடவுள்ளதாக அறிய முடிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments