புதிய அரசமைப்புத் தொடர்பிலான இடைக்கால அறிக்கை ஓகஸ்டில்

0
30

புதிய அரசமைப்புத் தொடர்பிலான இடைக்கால அறிக்கை ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற அரசமைப்புத் திருத்தம் தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

புதிய அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்படும் என்று பொய்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்த மதத்திற்கான முன்னுரிமை ஒருபோதும் நீக்கப்படமாட்டாது. அதபோல் ஏனைய மதங்களின் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படும்.

புதிய அரசமைப்புத் தொடர்பிலான இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளிடப்படும். இது இறுதி அறிக்கை அல்ல. இடைக்கால அறிக்கை மூலம் மக்களுக்கு கருத்துத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.

மக்களின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் சட்டமூலத்தை தயாரிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படவுள்ளது. சட்டவாக்கம் நீதித்துறை என்பனவற்றின் அதிகாரங்கள் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியமாகும். கலப்பு தேர்தல் முறை பற்றி சிறு கட்சிகள் இணக்கப்பாட்டை எட்டு அவசியம்.

புதிய அரசமைப்புத்

அதிகாரப் பகிர்வு தொடர்பான இறைமை அதிகாரம் மக்களை சாரும். இதனால் மக்களே அதுபற்றி தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement