பிலியந்தலை காவல் துறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

0
66

பிலியந்தலைபிலியந்தலை காவல்துறையால் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களும், நீதிமன்றத்தில் ஒரு பெண்ணாகவும் 3 ஆண்களாகவும் முன்னிலைப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிலியந்தலை – தம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாள் விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், பின்னர் அங்கு வந்த இரு தரப்பினர் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்களின் உடைகளை வைத்து பார்க்கும் போது கடுமையான மோதல் இடம்பெற்றிக்கலாம் என எண்ணிய காவல்துறை பொறுப்பதிகாரி, அவர்களை பரிசோதனை செய்யுமாறு காவல்துறை உத்தியோகஸ்தாகளிடம் கூறியுள்ளார்.

பின்னர் இரு பெண்களும், பெண் காவல்துறை அதிகாரிகளால் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் அதில் ஒருவரை பரிசோதனை செய்த போது அவர் பெண் அல்ல ஆண் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் இது குறித்த பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவரை அழைத்து பொறுப்பதிகாரி விசாரணை செய்த போது, தான் பெண் போன்று உடையணிவது தனது ஆசை என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

பின்னர் குடிபோதையில் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு அமைய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்த இரு பெண்கள் மற்றும் இரு ஆண்களும், ஒரு பெண்ணாகவும் 3 ஆண்களாக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அண்மைக்காலங்களாக இவ்வாறு ஆண்கள், பெண்களை போன்று உடை அணிந்து வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments