பிலிப்பைன்ஸில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0
12

பிலிப்பைன்ஸின் மின்டானாவோ தீவின் ஜெனரல் சாண்டோஸ் நகரில் இன்று அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரில் சமார் 6இலட்சம் மக்கள் வசிப்பதாகவும் பிலிப்பைன்ஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடலுக்கு அடியே சுமார் 74 கிலோமீற்றர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை என்றும்,இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 1990ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் சுமார் இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments