பிரியங்க பெர்னான்டோவுக்கு மீண்டும் வாழ்வளித்தார் ஜனாதிபதி

0
59

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பணியில் இருந்து இடைநிறுத்த விடுக்கப்பட்ட உத்தரவை ரத்துச் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை மீண்டும் பணியில் இணைந்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் சுதந்திர தினத்தில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான காணொளி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை இடைநிறுத்துமாறு நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டது.

அத்துடன் இதுகுறித்து இலங்கை இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய குழு விசாரணையை உடனடியாக ஆரம்பிக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த இடைநிறுத்த உத்தரவை இன்று ரத்துச் செய்துள்ள ஜனாதிபதி, பாதுகாப்பு ஆலோசகர் பணியில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ தொடர்ந்து ஈடுபட அனுமதி அளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com