பிரான்ஸ் ராணுவ மந்திரி ராஜினாமா

0
30
பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரான் தலைமயிலான கட்சியின் கூட்டணியில் உள்ள ’மோடெம்’ என்ற கட்சியை சேர்ந்த சில்வியே கவுலார்ட் என்ற பெண் அந்நாட்டு ராணுவத்துறை மந்திரியாக உள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆட்களை நியமினம் செய்வதில் முன்னர் ஊழல் நடைபெற்றதாக இவர்மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில்,தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக  சில்வியே கவுலார்ட் இன்று அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான சில்வியே கவுலார்ட், தன்மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் விரைவில் விசாரணையை சந்திக்க வேண்டியுள்ளதால் இனியும் ராணுவ மந்திரியாக நீடிப்பது சரியல்ல என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Advertisement