மனிதவுரிமை பேரவையுடன் இணங்க முடியாத விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும் என்கிறார் பிரதமர்

0
49

ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களும், இணங்க முடியாத விடயங்களும் சர்வதேச மனிதவுரிமைகள் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள உள்ளடங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க
பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ஹம்பாந்தோட்டை நைய்கல ரஜமஹா விஹாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

மனிதவுரிமைகள் பேரவையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இணங்க முடியாத விடயங்கள் தொடர்பில் மேலும் கவனம் செலுத்தப்படும். யுத்தம் காரணமாக நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய இனங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான உயிர்களை இழக்க நேரிட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க
பிரதமர் ரணில் விக்ரமசிங்க

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர் நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக சர்வதேச நாடுகள் தெரிவித்தன. எனினும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவிக்கு வந்ததன் பின்னர், இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை என தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, அரசாங்கம் கோரிக்கை விடுத்தபடி, இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கை தற்போது ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement