பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்னாம் பயணத்தை சுருக்கிக்கொண்டு நாடு திரும்புகிறார்

0
29

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்னாம் பயணத்தை சுருக்கிக்கொண்டு நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்திற் கொண்டு பிரதமர் முன்கூட்டியே நாடு திரும்புகிறார்.

கடந்த 10ஆம் திகதி ஜப்பான் நோக்கிப் புறப்பட்ட பிரதமர் 15 ஆம் திகதிவரை அங்கிருந்தார். ஜப்பானில் பல சந்திப்புகளில் கலந்துகொண்டதுடன், இருதரப்பு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டிருந்தார்.

ஜப்பானிய பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று வியட்னாமுக்கான பயணத்தை ஆரம்பித்தார். வியட்னாம் சென்றடைந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஹனோய் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் நாட்டில் பாரிய அரசியல் விவகாரமாக உருவெடுத்துள்ளது.

இதன் காரணமாக ஏப்ரல் 19ஆம் திகதி நாடு திரும்புவதாக இருந்த பிரதமர் முன்கூட்டியே நாடு திரும்ப தீர்மானித்துள்ளார் என்றும் அவர் இன்று இரவு அல்லது நாளை நாடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com