பிரதமர் ஜப்பான், வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு விஜயம்

0
150

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒன்பது நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 10ஆம் திகதி ஜப்பான் மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதி ஜப்பானுக்குச் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 15ஆம் திகதிவரை ஜப்பானில் இருதரப்புச் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

ஜப்பான் விஜயத்தை முடித்துகொண்டு 15ஆம் திகதி வியட்னாம் செல்லும் பிரதமர் 19ஆம் திகதிவரை வியட்னாமிரல் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

இதன்போது ஜப்பானிய பிரதமருடன் இலங்கையில் ஜப்பான் மேற்கொள்ளவுள்ள வர்த்தக நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேச்சு நடத்தவுள்ளதாகவும் அறியமுடிகிறது. பிரமருடன் அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலரும் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com