பிரதமரை நீக்கும் தேவை சு.கவுக்குக் கிடையாது!

0
20
பிரதமரை நீக்கும் தேவை சு.கவுக்குக் கிடையாது!

பிரதமரை
தயாசிறி ஜயசேகர
பிரதமரை நீக்குவதற்கான தேவைகள் சுதந்திரக் கட்சிக்குக் கிடையாது என  அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது ஊடகவியலாளர்களினால் தற்போதைய அரசு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு எனத் தெரிவிக்கப்படுவது தொடர்பாகவும் மற்றும் பிரதமரை நீக்கும் நோக்கம் சுதந்திரக் கட்சிக்கு உள்ளதா? எனவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப்  பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு என அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரும் கூறுகின்றனர். எமது கட்சியினரும் கூறுகின்றனர். ஆனால், சில பிரச்சினைகள் ஏற்படும்போது சிலர் தனிப்பட்ட கருத்துக்களைக் கூறுவர். ஆனால், அரசு என்ற ரீயில் ஒன்றாகவே தீர்மானங்களை மேற்கொள்வோம். அத்துடன் கூட்டுப்பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்க வேண்டிய நேரத்தில் இணங்க முடியாத விடயங்களுக்கு இரு கட்சிகளும் இணைந்து பேசி முடிவுக்கு வருவோம்.
இதேவேளை பிரதமரை நீக்கும் தேவை எமக்குக் கிடையாது. அரசு என்ற ரீதியில் நாங்கள் ஒன்றாகவே பயணிக்கின்றோம்” – என்றார்.