பாலியல் கொடுமை இந்திய வம்சாவளி வாலிபர் பலி

0
121
Want create site? Find Free WordPress Themes and plugins.

மலேசியா நாட்டிலுள்ள பினாங்கு பகுதியை சேர்ந்தவர் நவீன்(18). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானைப் போல் பிரபல இசையமைப்பாளராக உருவாக வேண்டும் என்ற இலட்சியக் கனவுடன் இங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.

சம்பவத்தன்று பினாங்கு நகரில் உள்ள ஒரு கடைக்கு நவீன் மற்றும் அவரது நண்பரான பிரவீன் ஆகியோர் பர்கர் வாங்குவதற்காக வந்திருந்தனர். அப்போது, நவீனின் முன்னாள் பள்ளித்தோழர்கள் சிலர் அங்கு வந்தனர்.

நவீன் மற்றும் பிரவீனை அவர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கேலியும் கிண்டலும் செய்தனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து அவர்கள் இருவரையும் ஐந்துபேர் சேர்ந்துகொண்டு ஹெல்மெட்களால் முரட்டுத்தனமாக தாக்கினர்.

இந்த தக்குதலில் காயமடைந்த பிரவீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தனியாக சிக்கிக்கொண்ட நவீனை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையிலும் அவர்கள் ஈடுபட்டனர். மேலும், அவரது முதுகுக்கு கீழ்பகுதியில் சிகரெட்களால் சுட்டும் கொடுமைப்படுத்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் நவீனின் தலை மற்றும் வயிற்றின் உள்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். மூளை செயலிழந்த நிலையில் பினாங்கு நகரில் உள்ள ஜார்ஜ் டவுன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பாலியல் கொடுமை

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து மாணவர்களையும் பினாங்கு நகர பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவன் நவீனுக்கு ஏற்பட்ட பரிதாபகரமான நிலை தொடர்பாக முன்னர் செய்தி வெளியானதும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வேதனையும் அதிர்ச்சியும் தெரிவித்திருந்தார்.

அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக குறிப்பிட்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனமும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் மயங்கிய நிலையில் கிடந்த நவீன், நேற்று மாலை நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார். இதையடுத்து, நவீனை தாக்கியதாக மேற்கண்ட 5 மாணவர்கள் மீது முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்த அடிதடி வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments