பாரதிராஜா மீது பொலிஸில் புகார்

0
45

பாரதிராஜா மீது பொலிஸில் புகார்

பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜாவின் மீது பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயக்குனர் பாரதிராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி விழுப்புரத்தை சேர்ந்த சட்டத்தரணி ராஜ்குமார், சென்னை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில், “பிற மொழி பேசுவோர் தமிழகத்துக்கு வரலாம். போகலாம். நடிகர்களாக இருந்தால் சினிமாவில் நடிக்கலாம். ஆனால் தமிழகத்தையே ஆள நினைப்பது தவறு. தமிழகத்திலேயே பிறந்து இருந்தாலும் பிற மொழி பேசுவோர், தமிழகத்தை ஆள விட மாட்டோம்.” என தெரிவித்திருந்தார்.

பாரதிராஜா

பாரதிராஜாவின் கருத்து தொடர்பில் குறித்த புகார் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேட்டியில் பாரதிராஜாவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கும் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com