பாதுகாப்புக்கு 20 நாய்கள்

0
91

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 20 நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

20 நாய் குட்டிகளை கொள்வனவு செய்து, பயிற்சியளித்து விமான நிலையத்தில் விமானங்களின் பாதுகாப்புக்காக இணைத்துக் கொள்வதற்கு, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Comments

comments