பாதாளக்கோஷ்டியை அடக்க விசேட பொலிஸ் பிரிவு உதயம்

0
32

பாதாளக்கோஷ்டிகளை கட்டுப்படுத்துவதற்காகவும், பாரிய குற்றச்செயல்களைத் தடுப்பதற்காகவும் விசேட பொலிஸ் பிரிவொன்று அமைக்கப்படும் என்று சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அடக்கப்பட்டிருந்த பாதாளக்கோஷ்டி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. குண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர் என்றே தெரிகின்றது. இதனால், மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?” என்று நாடாளுமன்றில் கேட்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பாதாளக்கோஷ்டியை அடக்க

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாதாளக்கோஷ்டி தலைதூக்கியுள்ளதாகக் கூறப்படுவததை ஏற்கமுடியாது. எனினும், இது பற்றி பிரச்சினையொன்று இருக்கின்றது.

பாதாளக்கோஷ்டியின் செயற்பாடு, பாரிய குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு விசேட பொலிஸ் பிரிவொன்று அமைக்கப்படும். இந்தப் பிரிவே பொலிஸில் உயர்மட்ட பிரிவாக இருக்கும். விவரங்கள் பொலிஸ்மா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கிய பின்னர் அது அமைக்கப்படும்” – என்றார் சட்டம், ஒழுங்கு அமைச்சர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement