பாதாளக்குழு உறுப்பினர்கள் நால்வர் கைது

0
28

பாதாளக்குழு உறுப்பினர்கள் நால்வர் கைது

பாதாளக்குழு

பாதாளக்குழு, மனிதப் படுகொலைகள் மற்றும் கப்பம் கோரல்களுடன் தொடர்புடைய பிரபல பாதாள உலக உறுப்பினரின் பிரதான உதவியாளர் உட்பட நால்வரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

எல்பிட்டிய, நியாகம, கோனலகொட பிரதேசத்தில் வைத்தே நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரிடமுமிருந்து ரிவோல்வர் ரக துப்பாக்கி அதற்குப் பயன்படுத்தும் ஐந்து தோட்டாக்கள், ரி 56 ரகத் துப்பாக்கி அதற்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டு என்பவற்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்தது.

நியாகம பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போதே அவர்களைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த குறிப்பிட்ட பொலிஸ் பிரிவு அவர்களிடமிருந்து 150 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement