பாகிஸ்தான் அணி இலங்கையணியை வீழ்த்தியுள்ளது

0
100

பாகிஸ்தான் அணி இலங்கையணியை வீழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் அணி

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றிருந்தது. பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களால் இலங்கையணியை வீழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 292 ஓட்டங்களைப் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 102 ஓட்டங்களையும், பாக்தர் ஜமான் 43 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.

லக்மால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. 50 ஓவர் முடிவில் 209 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகளை இழந்தது .
இலங்கை அணி சார்பில் திரிமானே 53 ஓட்டங்களையும், தனஞ்சய 50 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி மற்றும் ரும்மன் ரைஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

மற்றும் இலங்கையணியின் 8 தொடர்ச்சியான தோல்விகளாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement