பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல்

0
41

காஷ்மீரில், இந்திய-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பாகிஸ்தான ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுத உதவி செய்து வருவதாக இந்திய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் அஷோக் நரூலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கையை குறைத்து, உள்ளூர் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம், தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் எப்போது தாக்கப்பட்டது என்று குறிப்பிடாத அஷோக் நரூலா, “அண்மையில், மிக அண்மையில்” என்று மட்டுமே குறிப்பிட்டார்.பாகிஸ்தானின்

ஆனால் தன் நாட்டு ராணுவத்தின் எந்த தளமோ, முகமோ தாக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments