தெளிவாக இருங்கள் – திகா கோரிக்கை

0
33

“தோட்ட தொழிலாளர்களுடைய உழியர் சேமலாப நிதியை யானை தின்று விட்டதாகவும் பூனை தின்று விட்டதாகவும் மலையகத்தில் அதிகமான போதைபொருள் பாவனை உள்ளதாகவும் கூறி பொய்யான பிரச்சாரங்களில் சிலர் ஈடுபட்டு மக்களை திசை திருப்ப முயல்கின்றனர் இது குறித்து மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்” என்று, பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரம் கூட்டமொன்றில் நேற்றுஅவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த காலங்களில் எமது மக்களை ஏமாற்றி வந்தவர்கள் தற்பொழுது மாட்டி கொண்டார்கள். 2015ஆம் ஆண்டோடு அவர்களுடைய ஆட்டங்கள் அனைத்து முடிவடைந்து விட்டன.

ஆனால் சிலர் நான் மலையகத்திற்கு ஒன்றுமே செய்வில்லையென கூறி என்னை விமர்சித்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு தெரியுமா மலையகத்தில் 5000கும் மேற்பட்ட தனி வீடுகளை அமைத்துள்ளேன்.

எமது மக்களை 75வருடங்களாக ஏமாற்றியவர்கள் மலையகத்திற்கு என்ன செய்துள்ளனர்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com