பழனி திகாம்பரம்,செந்தில் தொண்டமான் இடையே மோதல்

0
122

அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது வாகனத் தொடரணி மீது தாக்குதல் மேற்கொண்டதாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் நேற்று ( 07.05.2017 ) ஞாயிற்றுகிழமை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பழனி திகாம்பரம்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மலையகம் விஜயம் குறித்து நோர்வூட் மைதானத்திற்கு தான் ஆதரவாளர்கள் சகிதம் சென்று விட்டு திரும்பும் போது தன்னை அமைச்சர் திகாம்பரத்தின் வாகன தொடரணி இடைமறித்து மிரட்டியதாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் பதிவு செய்துள்ள முறைபாட்டில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேலை அமைச்சர் திகாம்பரத்தின் ஊடாகவே இந்திய பிதமரின் வருகை தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கும் வேளையில் நோர்வூட் மைதானத்திற்குள் புகுந்த ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் குழப்பம் விளைவித்ததாக அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தினார்.

இரு தரப்பினரது முறுகள் நிலையை தொடர்ந்து நோர்வூட் நகரம் பதற்ற நிலைக்கு உள்ளானதால் நோர்வூட் நகரில் பொலிஸாரின் பாதுகாப்பு பலபடுத்தபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அத்துடன் நோர்வூட் பொதுமைதானத்தில் மலையக மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பழனி திகாம்பரம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement