பல்டி அடித்தது வைத்தியர் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு இல்லை

0
27

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை முதல் முன்னெடுக்கத் திட்டமிருந்த பணிப்பகிஷ்கரிப்பை ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பின் ஒரு அங்கமாக நாளையும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது.

என்றாலும் நாளைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு அடுத்த வாரம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

நேற்றுமுன்தினம் அரசின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்தில் சைட்டம் விவகாரத்துக்கு அரசு தீர்வுகாணும்வரை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் காத்திருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டால் அதற்கு முகங்கொடுக்க அரசு தயாராக இருப்பதாக கூறப்பட்டதையடுத்தே வைத்தியர் சங்கம் இவ்வாறு பல்டி அடித்துள்ளது.’

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments