பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் ஓராண்டு நினைவுதினம் இன்று பல்கலைக்கழகத்தில்

0
26

யாழ்ப்பாணம், பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் ஓராண்டு நினைவுதினம் இன்று பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைககழக கலைப் பீட மூன்றாம் வருட மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த 20.10.2016 பொலிஸாரினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் ஓராண்டு நினைவு தினம் இன்று காலை யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது மாணவர்கள் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com