பல்கலைகழக மாணவர்கள் பேரணி மீது கண்ணீர் பிரயோகம் : 10 பேர் கைது, 10 பேருக்கு காயம்

0
49

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், 10 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், 10 பேருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது மீண்டும் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை தற்போது மேற்கொண்டுள்ளனர்.

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் இந்தப் பேரணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு, விஹாரமகாதேவி பூங்காவின் அருகே பேரணி பொலிஸாரின் கட்டுபாட்டை மீறி பிரவேசிக்க முற்பட்ட வேளையில் பொலிஸார் பேரணி மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

லோட்டஸ் சுற்றுவட்ட வீதியினூடாக ஜனாதிபதி செயலகத்திற்கு இவர்கள் செல்ல முற்பதை தடுக்கும் முகமாக இடப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை தாண்டி செல்ல முற்பட்டமையாலேயே பொலிஸார் கண்ணீர் பிரையோகம் மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழுப்பில் நேற்று பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்தப் பேரணியில் சுமார் 5ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டதாக அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பல்கலைகழக

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com