பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி வீசப்பட்ட அவலம்

0
125
Want create site? Find Free WordPress Themes and plugins.

இந்தியா- பீகாரில் ஓடும் ரயில்வண்டியிலிருந்து 10வது வகுப்பு படிக்கும் சிறுமி 6 பேர் கொண்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தொடரூந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் லக்ஷிசரை என்ற இடத்திற்கும், கிமுல் ஜங்ஷன் என்ற இடத்திற்கும் இடையே தொடரூந்து வந்துகொண்டிருந்தபோது, குறித்த மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தொடரூந்தில் இருந்து வீசப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அக் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்த அந்த பெண் கொடுத்த தகவலின்படி இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து டிஎஸ்பி லக்கிசராய் பங்கஜ் குமார் தலைமையிலான ஒரு குழு விசாரணை செய்து வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments