பறிபோகும் கீதா குமாரசிங்கவின் பதவி

0
27

பறிபோகும் கீதா குமாரசிங்கவின் பதவி

geetha

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்பு சரியானதே என உயர் நீதிமன்றம் இன்று உறுதிசெய்துள்ளது.

geetha

கீதா 2015ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் இரட்டைக் குடியுறிமை இருப்பதால், கீதா குமாரசிங்கவுக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என காலி மாவட்ட வாக்காளர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, கடந்த மே மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

geetha

மேன் முறையீட்டு தீர்ப்பை ஏற்க மறுத்த கீதா குமாரசிங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணையின் முடிவில் கீதா குமாரசிங்கவுக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com