பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி

0
43

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி புதிய பாதுகாப்புச் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வழங்குவாத இல்லை என்பது குறித்த நாளை ஐரோப்பிய நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி புதிய பாதுகாப்புச் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்குமா என்பது நாளை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்திருந்தது. இந்தச் சலுகையை மீள வழங்குமாறு கோரி ஐரோப்பிய ஒன்றியத்திடம் தற்போதைய மைத்திரி அரசு விண்ணப்பித்திருந்தது.

எனினும், இந்தச் சலுகையை மீள வழங்குவதற்கு ஒரு தொகுதி நிபந்தனைகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை ஐரோப்பிய ஒன்றியம் விதித்தது. அதில் முக்கிய நிபந்தனைதான் பயங்கரவாதத் தடைச்சட்டதை மாற்றியமைத்தல். இன்று ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் 52 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்கக் கூடாது. இலங்கை இன்னமும் முன்னேற்றகரமான நடவடிக்கைளை மனிதவுரிமைகள் விடயத்தில் எடுக்கவில்லை என்று வலியுறுத்தி கடந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர்.

நாளை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்குமா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள சூழலிலேயே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி புதிய பாதுகாப்புச் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments