ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் வெள்ளியன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார்

0
18

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் வெள்ளியன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார்.

பப்லோ டி கிரெய்ப்

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இவர் எதிர்வருகின்ற வெள்ளியன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார்.

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் 13 நாள் சுற்றுப்பயணமாக நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்தார்.

இவர் இலங்கையின் நிலவிவரும் நிலைமைகள் தொடர்பாக மீளாய்வு செய்து, அதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளார்.

மற்றும் இலங்கையில் இருக்கும்போதே பல தரப்பட்டவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments