பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டது இந்தியா ; 11 ஓட்டங்களால் வெஸ்ட் இண்டிஸ் வெற்றி

0
101

வெஸ்ட் இண்டிஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்டத் தொடரின் நான்காவது ஒருநாள் போட்டி நேற்று ஆன்டிகுவா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது.

நாணயசுழற்சியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைவர் ஹோல்டர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வுசெய்தார்.

இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், யுவராஜ் சிங் மற்றும் அஸ்வின் நீக்கப்பட்டு மொகமது ஷமி, தினேஷ் கார்த்திக் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்களான எவின் லீவிஸ் மற்றும் கைல் ஹோம் தலா 35 ஓட்டங்களைக் குவித்தனர். நிதான துவக்கத்தை அளித்த ஜோடியை பாண்டியா உடைத்தெறிந்தார். துவக்க ஜோடியை தொடர்ந்து களமிறஹ்கிய ஷை ஹோம் 25 ஓட்டங்களுடனும், ராஸ்டன் சேஸ் 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் துவக்க ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மற்ற வீரர்களும் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களை வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்தது.

இந்திய அணி சார்பில் ஹார்திக் பாண்டியா மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். 190 என்ற வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

துவக்க வீரராக களமிறங்கிய ஷிகர் திவான் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களிமிறங்கிய தலைவர் வீராட் கோலி 3 ஓட்டங்களிலும், தினேஷ் கர்திக் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்த நிலையிலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அஜிங்கியா ரகானே பொறுப்புடன் விளையாடினார். 91 பந்துகளில் 60 ஓட்டங்களைக் குவித்த ரகானே பிஷோ பந்தில் ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சுக்கு

பின் களமிறங்கிய தோனி நிதானமாக விளையாடி 54 ஓட்டங்களைக் குவித்தார். எனினும் மற்ற வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்க தவறியதால் இந்திய அணி 49.4 ஓவர்களில் 178 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 11 ஓட்டங்களில் வெற்றியடைந்தது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 21 என்ற புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் தொடரின் இறுதி போட்டி ஜூலை 6ஆம் திகதி நடைபெறுகிறது.

பந்துவீச்சுக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments