பதுளையில் நிலத்தாழிறக்கம் : 150 குடும்பங்கள் இடம்பெயர்வு

0
38

பதுளை மாவட்டம் பண்டாரவளை பிரதேசத்தின் எல்ல திக்கராவ பிரதேசத்தில் நேற்று இரவு திடீரென நிலம் தாழிறங்கியதில் 150 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

உமா ஓயா திட்டம் முன்னெடுப்பு காரணமாக பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள வீடுகள், மதில்கள் என்பன இரண்டாகப் பிளவடைந்துள்ளதுடன், நீர் ஊற்றுக்கள், கிணறுகள் மற்றும் ஆறுகள் என்பன வற்றிப்போயுள்ளன.

இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாத நிலையில் நேற்றைய தினம் நிலத்தாழிறக்கம் காரணமாக 150 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து நேற்று இரவு கொழும்பு – பதுளை பிரதான வீதியில் வந்து போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்றைய தினம் சந்திப்பொன்று ஏற்படுத்திக்கொடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சில அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement