பதவி விலகமாட்டேன் முடிந்தால் நீக்கட்டும் : டெனீஸ்வரன் சவால்

0
31

என்னை அமைச்சுப் பதவியிலிருந்து அதிகாரத்தை பயன்படுத்தி முதலமைச்சர் முடிந்தால் விளக்கி காட்டட்டும் என்று வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைக்கப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அதிருப்தி அடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்தது. அதை அடுத்து சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து விலகினார். என்றாலும் தமிழரசு கட்சியில் இணைந்துக்கொண்ட பா.டெனீஸ்வரனின் பதவி விலக போவதில்லை என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement