பதவியை இராஜினாமா செய்தார் தொண்டமான்

0
36

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்து குறித்த பதவி விலகல் கடிதத்தை இ.தொ.காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஹட்டன் நகரின் குப்பை பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமை காரணமாக அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் உபத் தலைவர் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஹட்டன நகரில் நிலவும் குப்பை பிரச்சினையை தீர்ப்பதற்காக தான் மாவட்ட குழுவின் தலைவர் என்ற வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்த தீர்மானங்களை குறித்த அதிகாரிகள் செயற்படுத்த தவறியுள்ளதால் தனக்கு இந்த பதவி பயனற்றது என குறிப்பிட்டு குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com