ஏப்ரல் மாதம் 6ம் திகதி முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழமை போன்று இடம்பெறும்.

0
98
 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் 6ம் திகதி முதல் சர்வதேச விமானங்களுக்காக இந்த ஓடுபாதை திறக்கப்படுமென்று தலைமை சிவில் பொறியியலாளர் விஜய விதான தெரிவித்துள்ளார்.

அன்று முதல் விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறும்.

ஓடுபாதைகளை திருத்தியமைக்கும் பணி அடுத்த மாதம் 5ம் திகதி பூர்த்திசெய்யப்படுமென்றும் அவர் கூறினார். இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

3350 மீற்றர் நீளத்தையும், 45 மீற்றர் அகலத்தையும் கொண்ட இந்த ஓடுபாதை சர்வதேச விமான, சிவில் விமான அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்தத்திட்டத்திற்காக 7 தசம் 2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மத்திய ஆசியாவின் 5வது இடத்திற்கு முன்னேறியிருப்பதாக விஜய விதான மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments