பணிப்புறக்கணிப்பால் மருத்துவ நடவடிக்கை பாதிப்பு

0
19
பணிப்புறக்கணிப்பால் மருத்துவ நடவடிக்கை பாதிப்பு
பணிப்புறக்கணிப்பால்
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக சுகாதார, கல்வி மற்றும் மேலும் சில தொழிற்சங்கங்கள் இணைந்து அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதன்காரணமாக மருத்துவமனை, பாடசாலை மற்றும் பல்கலைக்கழங்கள் என்பவற்றின் நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக அதிகளான நெருக்கடியை மருத்துவமனையின் நோயாளர் பிரிவு மற்றும் மருத்துவ பராமரிப்பு நிலையம் என்பன சந்தித்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளார்.
எனினும் அவசர சிகிச்சைகள் இடம்பெறுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கிராம பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருகை குறைவடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவாக இன்று மதியம் சகல பல்கலைகழகங்களுக்கும் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதேவேளை வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
வைத்தியசாலைக்கு வந்த வெளிமாவட்ட நோயாளர்கள் பலர் வைத்தியசேவைகள் இன்றி திரும்பிச்சென்றனர்.
வெளிநோயாளர் பிரிவு உட்பட அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தின் அனைத்து வைத்தியசாலைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
Advertisement