214 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ்

0
107

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் டெஸ்ட் போட்டியில் முதலாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பங்களாதேஷ்

போட்டியின் இரண்டாவது நாளான இன்று இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 338 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டையும் இழந்திருந்தது.
துப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் 300 பந்துகளில் 10 பவுண்ரிகள், 1 சிக்ஸர் அடங்களாக 138 ஓட்டங்களையும், டி. சில்வா மற்றும் டிக்வெல்ல ஆகியோர் தலா 34 ஓட்டங்கள் என்ற அடிப்படையிலும் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபி ரஹமான், சஹிப், சமசிஸ் ரோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றிக்கொண்டனர்.
பதலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி 60 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களை எடுத்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் சர்கார் 61 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். அத்துடன், ரஹ்மான் 42, கயிஸ் 34 என்ற அடிப்படையில் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

பங்களாதேஷ்

பந்துவீச்சில் இலங்கைச் சார்பில் லக்ஷான் சன்டகன் 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும். இலங்கையைவிட பங்களாதேஷ் 124 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com