பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்சியாளராக சம்பிக்க ராமநாயக்க நியமனம்

0
32

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அதி திறமை பிரிவின் பிரதான பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து பயிற்சியாளர் சம்பிக்க ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

2015ம் ஆண்டு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளராக நியமிக்கப்பட்ட சம்பிக்க ராமநாயக்க இறுதியாக நடைபெற்ற சிம்பாபே உடனான போட்டியை தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
தனிப்பட்ட தேவை காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் இலங்கை கிரிக்கெட் சபையிடம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பங்களாதேஷ் அணியுடன் இணைந்துள்ள சம்பிக்க ராமநாயக்க அவ்வணியின் பயிற்சியாளர் குழாமில் இணையும் ஐந்தாவது இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்சியாளராக சந்திக்க ஹத்துருசிங்க செயற்படுகின்ற அதேநேரம் திலான் சமரவீர, ருவான் கல்பகே, மாறியோ வல்லவராயன் ஆகியோரும் பயிற்சியாளர்களாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments