கத்துக்குட்டியிடம் பாடம் கற்ற நோவக் ஜோகோவிச்

0
119

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 4ஆவது சுற்றில் உலகின் 2ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கத்துக்குட்டியிடம் பாடம் கற்றுக்கொண்டுள்ளார்.

நோவக் ஜோகோவிச்

உலகின் 16ஆம் நிலை வீரரான அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸிடமே நோவக் ஜோகோவிச் தோல்விக்கண்டுள்ளார்.
நிக் கிர்கியோஸ், ஜோகோவிச்சை, 64, 7 6 (73) என்ற நேரடி செட்களில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அவர் கால்இறுதியில் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரரை சந்திக்கவுள்ளார்.

ஜோகோவிச்சை வீழ்த்துவது கடினமானது. என்றாலும் அவரை வீழ்த்தியது பெருமையாகவுள்ளது என்று நிக் கிர்கியோஸ் தனது வெற்றி குறித்து கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments