நோன்புப் பெருநாளில் இடம்பெற்ற சோகம் – தொழுகையில் ஈடுபட்டவர் மீது தாக்குதல்

0
52

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் முஸ்லிம்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அவ் இடத்திற்கு சென்ற பிறிதொரு முஸ்லிம் குழுவினர் அவ்வாறு வழிபடுவது தவறு எனவும் அவ் வழிபாட்டை நிறுத்துமாறு கோரியும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இரும்பு கம்பிகள் மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்ட ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, உலுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com