நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய கட்டிடங்கள்

0
22
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தை உடனடியாக திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளாhர்.
இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நுவரெலியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அருண ஜயசேகர உட்பட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலையை, பொறுப்பேற்றுள்ள ஒப்பந்தகாரர்கள் அதன் பணிகளை மிக விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவமனையை மேற்பார்வையிடுவதற்காக மத்தியமாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
Advertisement