நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் விஜயகலா மீது நடவடிக்கை

0
1052

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பத்தின் போது பிரதான சந்தேக நபரான சுவில் குமார் தப்பிச்செல்வதற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரி உதவிபுரிந்தாக கூறப்படுவது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவளித்தால் நடவடிக்கையெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

சுவிஸ் குமாரை தப்பவிடுவதற்காக விஜயகலா மகேஸ்வரி மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பிலான காணொளியொன்று அண்மையில் வெளியாகியது. இது குறித்து பொலிஸாரால் நடவடிக்கையெடுக்கப்படுமா என்று ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் மேலும் கூறியதாவது,


வித்தியா கொலை தொடர்பிலான வழக்கு தற்போது யாழ். நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. நீதிமன்றமே இந்த விடயம் குறித்து நடவடிக்கையெடுக்க முடியும். நீதிமன்றத்தால் பொலிஸாருக்கு விசேட பணிப்புரை ஏதும் விடுக்கப்படின் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கையெடுக்க முடியும் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments