நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் மோட்டார் சைக்கிள் மீட்பு

0
110

நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றவரின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். அரியாலை பகுதியிலேயே இன்று காலை மோட்டார் சைக்கிள் மீட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியன்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நல்லூர் பகுதியில் வைத்து நேற்று மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தாக்குதலை மேற்கொண்ட நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் லிதப்பிச் சென்றிருந்தார்.இந்நிலையிலேயே குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் அரியாலை பகுதியில் வைத்து மீட்டுள்ளனர். அத்துடன், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்துக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement