நீண்டகால திட்டத்தின் விளைவே லாஸ் வேகாஸ் தாக்குதல்

0
30

லாஸ் வேகாஸ் தாக்குதல்அமெரிக்கா – லாஸ் வெகாஸில் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையாகும் என அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – லாஸ் வெகாஸ் நகரில் கடந்த முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்திருந்தனர்.

இசை நிகழ்ச்சியின் போது 64 வயதான நபரொருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சம்பத்தின் பின்னர் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தற்கொலை செய்வதற்கு முன்னர் அவரின் வங்கி கணக்கிற்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments