நிவின் பாலி நடிக்கும் ” காயம்குளம் கொச்சுண்ணி ” !

0
34
தூங்காவனம் , பழசிராஜா போன்ற வெற்றி படங்களை தயாரித்த கோகுலம் கோபாலன் வழங்கும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் திரைப்படம் ” காயம்குளம் கொச்சுண்ணி ” இப்படத்தை ” 36 வயதினிலே ” , மும்பை போலீஸ் புகழ் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்குகிறார். இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார் , கதாநாயகியாக அமலா பால் நடிக்கிறார்.
உதயநாணு தாரம்,மும்பை போலீஸ் , ஹவ் ஓல்ட் ஆர் யு போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி மற்றும் சஞ்சய் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.ஒளிப்பதிவு பினோத் பிரதான் , படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் , கலை சுனில் பாபு ,  , இசை கோபி சுந்தர்.
costumes- Dhanya . Make up – Ranjith
கதை கரு :- காயம்குளம் கொச்சுண்ணி 19ஆம் நூற்றாண்டில் கயம்குளம் பகுதியில்  வாழந்த பழம்பெரும்  திருடன் ஒருவரை பற்றிய படமாகும். அத்திருடன் அப்போது வாழ்ந்த செல்வந்தர்களிடமிருந்து பணம் , பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார் ( ராபின் ஹூட் போல ) . அவருடைய  குழந்தை பருவம் முதல் வறுமை வாட்டியெடுத்தது தான் இதை போன்ற விஷயங்களில் அவர் ஈடுபட காரணம் என்று கூறப்படுகிறது.
கேரள வரலாற்றில் இவரை போன்ற அன்பான , பயங்கரமான திருடன் ஒருவன் இன்று வரை இருந்ததில்லை என்பது தகவல்.1859 கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தியுள்ளார்.